முச்சக்கர வண்டியில் 100 கிலோ மாட்டிறைச்சியை கொண்டு செல்ல முற்பட்டவர் கைது!!

செவ்வாய் செப்டம்பர் 22, 2020

யாழ்ப்பாணம்–ஐந்து சந்தி பச்சைப்பள்ளிக்கு அருகாமையில், சட்டவிரோதமாக இறைச்சியாக்கப்பட்ட 100 கிலோ மாட்டிறைச்சி, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (22) காலை 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலினடிப்படையில், குறித்த மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்தின்போது, முச்சக்கர வண்டியில் 100 கிலோ மாட்டிறைச்சியை கொண்டு செல்ல முற்பட்டவேளை, விஷேட அதிரடிப் படையினரால் குறித்த மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இறைச்சியாக்குவதற்குத் தயார் நிலையில் இருந்த 33 ஆடுகளும் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.