முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு சிறிலங்கா இராணுத்திடம்

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

 சிறிலங்கா காவல் துறை  தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளதால் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் பொறுப்பை இராணுத்திடம் ஒப்படைத்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

படையினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர் ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படையினரை காவல் துறைக்கு உதவுவதற்காக தயார் நிலையில் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

காவல் துறை  தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதால் படையினர் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பினை வழங்குகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.