மூக்கடைப்பு, சளித்தொல்லையை போக்கும் இஞ்சி - துளசி டீ

செவ்வாய் மார்ச் 17, 2020

தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலி, சளித்தொல்லை இருப்பவர்கள் இஞ்சி - துளசி டீ அருந்தலாம்.  இந்த டீ செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

டீத்தூள் - 4 டீஸ்பூன்

தண்ணீர் - 4 கப் (அ) 5 கப்
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்
தேன் - 6 டீஸ்பூன்
இஞ்சிச் சாறு - சிறிதளவு

துளசி - 5 இலைகள்

 

இஞ்சி - துளசி டீ

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அல்லது டீ குக்கரில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் நன்கு கொதிக்கும்போது டீத்தூள், இஞ்சிச் சாறு, துளசியைச் சேர்க்கவும்.

உடனே 5 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.

பின் ஒரு பெரிய கப்பில் தேன் தேவைக்கேற்ப சேர்த்து டீயை வடிகட்டி கலக்கி எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

பால் இல்லாத இந்த டீ சுவையாக இருக்கும்.
சூடாகவோ, ஜில்லென்றோ பருகலாம்.