முகமூடிகளின் வகைகளும் அவைகளின் பயன்களும்

புதன் ஏப்ரல் 29, 2020

•    *சத்திர சிகிச்சை முகமூடிகள்* - மிகவும் பயனுள்ள முகமூடிகள். இருப்பினும், அவையின் விநியோகம் குறைந்து காணப்படுகிறது. எனவே அவை COVID 19 ற்கு எதிராக பணிபுரியும் முன்னணி சுகாதார சேவகர்களுக்காக பாதுகாக்க படவேண்டும்.
•    *துணி முகமூடிகள்* - இவைகளை வீட்டில் செய்யவோ அல்லது விலைகொடுத்து வேண்டவோ முடியும். சத்திரசிகிச்சை முகமூடிகளுக்கான வடிகட்டும் பண்பு இவற்றில் இல்லை. பொது இடங்களில் முகமூடியை பயன்படுத்த வேண்டிய தேவையை பூர்த்தி செய்ய இவற்றை பயன்படுத்தலாம்.

*பொதுவான ஆலோசனைகள்*

•    *அத்தியாவசியம் எனில் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். இது COVID 19 ஐ நீங்கள் தொடர்பு கொள்ளும் மற்றும் பரப்பும் ஆபத்தை குறைக்கிறது. உங்களுக்கு சுவாசக்குழாய் நோய்களுக்கான அறிகுறிகள் (காய்ச்சல், தொண்டை நோ, இருமல்) இருப்பின் நீங்கள் வீட்டிலேயே இருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் உங்களுக்கு COVID 19 இருப்பின் நீங்கள் மற்றவர்களுக்கு அதை பரப்பக்கூடும்.*
•    *உங்கள் முகமூடிகளையோ அல்லது முகத்தையோ தொட வேண்டாம்* (வைரஸ் உங்கள் கைகளில் இருந்து முகத்திற்கோ அல்லது வேறு மேற்பரப்புக்கு பரவலாம்).
•    *உங்கள் கைகளை சவர்க்காரம் மற்றும் நீர் கொண்டு முடிந்த அளவிற்கு கழுவுங்கள்* (கைகளை கழுவ முடியாத தருணத்தில் சுத்திகரிப்பு திரவம் இருந்தால், அதனை பயன்படுத்துங்கள்).

*நீங்கள் எந்த முகமூடியை பாவித்தாலும், பின்வருவன அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும்*

*சத்திரசிகிசிச்சை முகமூடிகளுக்கு*

•    ஒவ்வொரு நாளும் புதிய முகமூடியை அணியுங்கள், ஏனெனில் இவற்றை கிருமிநீக்கம் செய்ய முடியாது: இவற்றை அப்புறப்படுத்த ஷாப்பிங் பையில் போட்டு உக்காத கழிவுகளுடன் அப்புறப்படுத்துங்கள்.

*வீட்டில் செய்த அல்லது வெளியில் விலைக்கு வேண்டிய துணி முகமூடிகளுக்கு மற்றும் மாற்று தீர்வுகளுக்கு (கைக்குட்டை , துண்டு, துவாய்)*

•    முகமூடி அணிவது கட்டாயமாக இருப்பதால், சத்திரசிகிச்சை முகமூடிகள் விலை உயர்வாக இருப்பின், துணி முகமூடிகளை அணியலாம். இவற்றை சத்திரசிகிச்சை முகமூடிகள் போல அணியலாம். இவற்றை மீள பயன்படுத்த 3 நிமிடங்களுக்கு தண்ணீரில் கொதிக்க வைத்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும். அல்லது சவர்க்காரமும் தண்ணீரும் கொண்டு கழுவி உலர வைத்து இஸ்திரியிடவும்.
•    முகமூடி ஈரமானால் அதை மாற்றவும்.

*பொது இடங்களுக்கு சென்ற பின்னர் வீடு திரும்புவது*

தற்பொழுது ஊரடங்கு சட்டம் தவிர்க்கப்பட்டதாலும், சமூக விலக்கல்களில் இருக்கும் நடைமுறை சிக்கல்களினாலும், உங்கள் வீடுகளில் COVID 19 தொற்றை கட்டுப்படுத்துவது மிக முக்கியமானதாகும். பின்வரும் கிரியைகள் (முடிந்த இடங்களில்) உங்களுக்கும், உங்கள் வீடுகளில் வசிக்கும் மற்றவர்களுக்கும் இந்த தொற்றை குறைக்க பயன்படும்.

1.    அத்தியாவசியம் அன்றி உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்.
2.    வீட்டிற்குள் நுழைதலை குறைத்து கொள்ளுங்கள். வீட்டில் வசிப்பவர் மட்டுமே வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும். வேறு யாரவது வீட்டிற்குள் நுழைய வேண்டும் எனில் அவர்களும் பின்வரும் அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.
3.    வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குறைந்த பட்சமான பொருள்களை எடுத்து செல்லுங்கள்.
4.    வீட்டிற்குள் நுழையும் தருவாயில் முகமூடிகளை கழற்றுங்கள். முகமூடிகளுக்கென்று ஒரு தனி குவளையையோ அல்லது பையையோ வைத்திருங்கள். முகமூடிகள் அப்புறப்படுத்தப்படவோ (உலோக துண்டை கொண்ட சத்திரசிகிச்சை முகமூடிகள்) அல்லது மீள பாவிக்கும் ரகம் எனில் 10 நிமிடங்களுக்கு நீரில் கொதிக்க வைக்க வேண்டும்.
5.    நீங்கள் கையில் வைத்திருக்கும் பொருள்களை வைக்க ஒரு தனி இடத்தை நியமியுங்கள். இவற்றுள் வாகன சாவி, முகமூடிகள், பணப்பை, காய்கறி போன்றவையும் அடங்கும். மீள பயன்படுத்த வேண்டிய பொருள்களை தண்ணீரும், சவற்காரமும் கொண்டு (வாகன மற்றும் வீட்டு சாவிகள்) அல்லது 70% ஆல்கஹால்  துடைப்பு கொண்டு (பணப்பை) சுத்தம் செய்க. பாதணிகளை வீட்டிற்கு வெயியேயோ அல்லது பாதுகாப்பான ஒரு இடத்திலேயோ, குழந்தைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எட்டாத வகையில் வையுங்கள்.
6.    உடனடியாக (எதையும் தொடாமல்) நேரடியாக சென்று உங்கள் கைகளை 20 வினாடிகளுக்கு தண்ணீரும் சவற்காரமும் பாவித்து கழுவுங்கள்.
7.    அணிந்த ஆடைகளை மாற்றுங்கள். அவற்றை உடனடியாக தோய்த்தல் நன்று; அல்லது தோய்க்கும் வரை ஒரு பையில் மூடி வைக்க வேண்டும்.
இதற்கு காரணம், பொது இடங்களில் பலர் இருந்திருப்பின், சமூக விலக்கல் கடைபிடிக்க படாதிருப்பின் உங்கள் ஆடைகளிலும் வைரஸ் இருக்க கூடும்; அது வீட்டின் மற்ற பாகங்களிலும் சென்று அடைய கூடும்.
8.    கொண்டு வந்த பொருட்களை வைத்து விட்டு உடையை மாற்றிவிட்டு மீண்டும் கைகளை கழுவுக.
9.    ஞாபகத்தில் கொள்க - முகமூடிகள் கிருமிநீக்கம் செய்யப்படாமல் மறுபடியும் பாவிக்கப்படல் ஆகாது.
காரணம்: முகமூடியின் வெளிப்பகுதி வைரஸினால் அசுத்தம் அடைந்திருக்கலாம், அதனால் அது முகமூடியின் உள்பகுதியிலும் அது தொடர்பில் கொள்ளும் எந்த மேற்பரப்பிலும் வைரஸை பரப்பும்.
10.    ஒருவருக்கொருவர் தத்தம் முகங்களை தொடாதவண்ணம் உதவி செய்க.
காரணம்: ஏனேனில் எந்தவொரு அறிகுறியும் இல்லாத ஒருவர், நேரடி தொடர்பின் மூலமும்  மற்றும் அவர் தொடும் எந்த பொருளிலும் வைரஸை மிகவும் இலகுவாக பரப்பக்கூடும். நாம் அதன் பின்னர் வைரஸை நம் கைகளிலே எடுத்து நம் மூக்கு, கண்கள், வாய் ஆகியவற்றிற்கு பரப்பி நம்மை நாமே தொற்றுக்கு உள்ளாக்குவோம். மேலும் நாம் இதை மற்றவர்களுக்கும் ஏனைய இடங்களிலும் பரப்பக்கூடும்!

Prof. Thevanesam
Emeritus Professor, University of Peradeniya,
26.04.2020

https://www.cdc.gov/coronavirus/2019-ncov/prevent-getting-sick/diy-cloth-face-coverings.html

•    முகமூடியை அணிய முதலும், கழற்றிய பின்னரும் கைகளை கழுவுங்கள்.
•    உங்கள் முகமூடிகள் மூக்கின் மேல் இருந்து நாடி வரை மறைப்பதை உறுதி செய்யுங்கள்.
•    ஒருதடவை அணிந்த பின், முகமூடியை தொடாதீர்கள்.
•    ஒரே முகமூடியை 8 மணித்தியாலங்களுக்கு மேல் பாவிக்காதீர்கள்.
•    அழுக்கடைந்த முகமூடியை போடுவதற்கு நீர் புகமுடியாவண்ணம் முத்திரை செய்யக்கூடிய பை ஒன்றை எடுத்து செல்லுங்கள்.
•    உங்களுடைய முகமூடிகள் வேர்வையுடனோ அல்லது தண்ணீருடனோ கலந்தால், உடனடியாக அதை கழற்றி ஒரு பையினுள் போடுங்கள். அதை எந்த மேற்பரப்புடனும் தொடவிடவேண்டாம்.
•    முகமூடியை கழற்ற முன்னரும்,கழற்றிய பின்னரும் கைகளை கழுவுங்கள்.
•    முகமூடியை எப்படி அணிவது என்பதற்கான காணொலியின் இணைப்புகள்.

https://www.youtube.com/watch?v=gggtXTuhJek