முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்!!

ஞாயிறு மார்ச் 07, 2021

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றன.

ஞாயிறு வழிபாடுகளின் பின்னர் ஆலயத்திற்கு வெளியில் கூடிய மக்கள், பதாதைகளைத் தாங்கியவாறு அமைதி முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டார்கள்.

இஸ்லாமிய சமயத்தவர்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், அடக்கம் செய்வதற்குத் தெரிவுசெய்யப்பட்ட இடம் தொடர்பாகவே தமக்கு உடன்பாடில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.