முல்லைத்தீவில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் படுகாயம்

வியாழன் ஜூன் 13, 2019

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் இன்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காயமடைந்தவர் மாங்குளம் வைத்தியசாலையில் கிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அவர் அங்கிருந்து தற்போது யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்களோ காயமடைந்தவரின் பெயர் விபரங்களோ இதுவரை தெரியவரவில்லை. மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் பதட்டத்துடன் இரவைக் கழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.