முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நாளை அகழ்வாராய்ச்சி ஆரம்பம்!

புதன் சனவரி 27, 2021

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலய பகுதியில் நாளை (28) அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கின்றன.

இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தாயகத்தில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா படைகள் படைகள் மற்றும் காவல்துறை பங்குபற்றுதலோடு குருந்தூர் மலையின் தொல்பொருள் அகழ்வாராட்சி பணிகள் கடந்த 18-01-2021 அன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

அகழ்வாராய்ச்சி பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தாலும் இன்று வரை அதனுடைய அகழ்வாராட்சி பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த மலையடிவாரபகுதிக்கு அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுகின்ற அதிகாரிகள் வருகைதந்துள்ளதோடு பணிக்கு தேவையான உபகரணங்கள் பலவும் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளன

நாளைய தினம் முதல் தொடர்ச்சியாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகளை செய்ய போவதாக குறித்த தொல்பொருள் திணைக்களத்தின் உடைய அகழ்வாராய்ச்சிக்கு பொறுப்பாக வருகை தந்திருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

இருப்பினும் இன்றைய தினம் அவர்கள் கொண்டுவந்த அகழ்வாராட்சிகான பொருட்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தூண்கள் போடுவதற்கு பயன்படுத்துகின்ற தூண் பெட்டிகளும் அங்கே கொண்டு வரப்பட்டிருக்கிறது மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது

ஏற்கனவே நீதிமன்ற அனுமதி உள்ளபோதும் மலைபகுதியில் கட்டுமான வேலை ஒன்று இடம்பெற்றுள்ளமை காண சான்றுகளும் அங்கே காணப்படுகின்றன குறித்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்காக அந்த இடம் அமைக்கப்பட்டது என்ற சந்தேகமும் வலுவாக நிலவுகின்ற நிலையில் குறித்த இடத்தில் கட்டுமானப் பணிகளுக்கான மணல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் ஏற்கனவே கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு பகுதி கட்டுமான வேலைகளும் நிறைவடைந்த நிலையில் காணப்படுகின்றது

எனவே அதனுடைய தொடர்ச்சியான வேலையும் இந்த அகழ்வாராட்சியோடு இணைந்து இடம்பெறலாம் என்ற ஒரு அச்ச சூழ்நிலையும் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.