முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பெயர்ப்பலகை திரைநீக்கம்!!

புதன் அக்டோபர் 20, 2021

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கான அலுவலகம் இன்று (20) திறந்து வைக்கப்பட்டுள்ளது.முல்லைதீவு ஊடக அமையத்தின் கட்டிட திறப்பு விழாவானது முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் தலைவர் கலாநிதி.எஸ்.ரகுராம் அவர்கள் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்ததை தொடர்ந்து அலுவலக கட்டிடத்தினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

111

நிகழ்வில் யாழ் ஊடக அமைய நிறுவுணர் தயாபரன் மற்றும் வடக்கு மாகாணத்தின் ஊடக அமைப்புக்களின் தலைவர்கள் ஊடகவியலாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.