முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மிதிவெடிகள் மீட்பு!

செவ்வாய் சனவரி 14, 2020

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள வட்டுவாகல் ஆற்றங்கரை கடலினை அடையும் பகுதியினை அண்மித்த பகுதியில் இருந்து மிதிவெடிகள் சில மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுகாவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு காவல் துறையினர்  குறித்த மிதிவெடிகளை இனம் கண்டுள்ளனர்.

இதன்போது 9 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை நீதிமன்ற உத்தரவு பெற்று அகற்றும் நடவடிக்கையில் முல்லைத்தீவு காவல் துறையினர்  ஈடுபட்டுள்ளனர்.