முள்ளிவாய்க்கால் மண்ணே !

வெள்ளி மே 08, 2020

முள்ளிவாய்க்கால்
மண்ணே உன்னை
முத்தமிட்டு
வணங்குகிறேன்
ஏனெனில் உன்னை
அழித்தவர்கள்
இன்றோ முகம்
இருந்தும் முகத்திரையுடன்
வாழ்கிறார்கள்
தெருவில்
உலகே நாம்
உன்னிடம்
கேட்டது
பிச்சை
இல்லை
எமக்கான உரிமை
இன்று நீயே
பிச்சை எடுக்கிறாய்
முள்ளிவாய்க்கால்
ஆன்மாக்களிடம்
உன் முற்றம்
சிறக்கட்டும்
எங்கள் முற்றமோ
சிவக்கட்டும்

றொப்