முள்ளிவாய்க்கால் நாட்களை மனதில் நிறுத்தி பேர்லினில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு!

செவ்வாய் ஏப்ரல் 02, 2019

தமிழின அழிப்பு நாள் மே 18 , மாறாத வடுக்களாக மாறி விட்ட வலி சுமத்த முள்ளிவாய்க்கால் நாட்களை மனதில் நிறுத்தி  பேர்லினில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு 

தமிழின அழிப்பு நாள் மே 18 , மாறாத வடுக்களாக மாறி விட்ட வலி சுமத்த முள்ளிவாய்க்கால் நாட்களை மனதில் நிறுத்தி சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி போராட வேண்டிய சமநேரத்தில்  அண்மித்துவரும் கடந்த 10 வருடங்களும் எமது செயற்பாடுகள்  சார்ந்தும் மீளாய்வு செய்ய வேண்டிய காலப்பதிவாகவே நாம் இன்றைய நாட்களை பார்க்கவேண்டும். 

அந்தவகையில் எதிர்வரும் வாரங்களில்  யேர்மன் ரீதியாக மக்கள் சந்திப்புகள் நடைபெறவிருக்கும் வேளையில் முதலாவது  மக்கள் சந்திப்பாக தலைநகரம் பேர்லினில்  கடந்த சனிக்கிழமை 30.03.2019 அன்று தொழிலாளி பொதுநல மக்கள் சந்திப்பு மண்டபத்தில் நடைபெற்றது . இச் சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் மத்தியில் எதிர்வரும் தமிழின அழிப்பு நாள் மே 18 பேரணியை வலுப்படுத்தும் முகமான கருத்துக்களும் அத்தோடு எமது வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்யும் முகமான கருத்துக்களும் உரையாடலாக அமைந்தது. 

குறிப்பாக இச் சந்திப்பில் கலந்துகொண்ட இளையோர்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்கள் ஊடாக  கிடைக்கப்பெற்ற கருத்துக்கள் அனைவராலும் வரவேற்கப்பட்டது. முக்கியமாக எமது போராடடம் தொடர்பான கருத்துக்களை எப்படி அடுத்த தலைமுறைக்கு கடத்த போகின்றோம் எனும் விடையத்தில் இளையோர்களால் சிறப்பான கருத்துக்களும் ஆலோசனைகளும் , அதற்கான பொறிமுறைகளை பற்றிய விளக்கங்களும் முன்வைக்கப்பட்டது. புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளரும் இளம் தலை முறைகளுக்கு உணர்வுபூர்வமாக மட்டும் அல்ல அறிவுபூர்வமாகவும் எமது அடையாளம், வரலாறு மற்றும் விடுதலைப் போராட்டம்   சார்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என இளையோர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இளையோர்களுக்கான விளக்க சந்திப்புகளை உயர்கல்வி மாணவர்கள் செய்துவருகின்றனர் என்பதையும் இளையோர்கள் அறியப்படுத்தினர். 

 கடந்த ஐநா மனிதவுரிமை அமர்வு தொடர்பாக யேர்மன்  வெளிவிவகார அமைச்சுடன்  மேற்கொள்ளப்பட்ட அரசியல் சந்திப்பு தொடர்பாகவும்  தகவல்கள் பரிமாறப்பட்டது.ஐநா மனிதவுரிமை பேரவை உறுப்பு நாடுகளுடனும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நடைபெற்ற சந்திப்புகளில் பேர்லின் வாழ் உயர்கல்வி  மாணவர்கள் சார்பாகவும் இளையோர்கள்  கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக தமிழின அழிப்பு நாள் மே 18 அன்று Düsseldorf மாநகரத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக  பேர்லினில் இருந்து பேரூந்தில் மக்களை  ஒருங்கிணைத்து கொண்டுசெல்லும் வேலைத்திட்ட பகிர்வும்  செய்யப்பட்டது.

m