முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பணி பூர்த்தி!

செவ்வாய் பெப்ரவரி 12, 2019

இறுதிப் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி  யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பகுதியில் தூபியை அமைப்பதற்கு கொழும்பின் உத்தரவுக்கு அமைவாக பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஆரம்ப கட்ட வேலையுடன் இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்கும் பணிகளை பல்கலைக்கழக மாணவர்கள் முடிவுறுத்தியுள்ளனர்.

இறுதிப் போரின் போது படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் உறவுகள் என பலருடைய நினைவாக இந்த தூபி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தூபியின் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவுசெய்யப்பட்டு இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.