முள்ளிவாய்க்காலில் நடந்தது "திட்டமிட்ட இனப்படுகொலை"அவுஸ்ரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்

வியாழன் ஜூன் 11, 2020

அவுஸ்ரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஹாக் மெக்டெர் மொட்  அவர்கள் ,முள்ளிவாய்க்காலில் நடந்தது "திட்டமிட்ட இனப்படுகொலை " என்று தனது கருத்தை நீதியின் பக்கம் நின்று பதிவு செய்துள்ளார் .இது சர்வதேச தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது . 
ஈழத்தில் அரங்கேறிய இன அழிப்பு குறித்து தமிழின அழிப்பு நினைவு நாளில்  நீதியின் குரலாக துணிச்சலோடு  கருத்துவெளியிட்டதனால்  ஹாக் மெக்டெர் மொட்  (Hugh McDermont ) அவர்களை எதிர்த்து சிறீலங்கா அரசின் ஆதரவுடன் அவுஸ்திரேலியா வாழ் சிங்களர்களால் அவர் அங்கத்துவம் வகிக்கும் தொழிலாளர் கட்சிக்குள் அவருக்கெதிராக சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். இதனை எதிர்த்து ஹாக் மெக்டொர்மொட் அவர்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியா வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் கையெழுத்து இயக்கத்திற்கும் அவரின் வேறு சில இராசதந்திர நடவடிக்கைகளுக்கும் வலுச்சேர்க்கும் முகமாக தீவிரமாக செயற்பட்ட தமிழர் அமைப்புகளுக்கு நியூ  சவுத் வேல்ஸ் மாகாண மாநில பாராளுமன்ற உறுப்பினர்  ஹாக் மெக்டொர்மொட் அவர்கள் தனது ஊக்கிவிப்பு கடிதத்தை அனுப்பியருந்தார்.
மேலும் ஹாக் மெக்டொர்மொட் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மற்றும் ஈழத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பை அங்கீகரிக்கவும் மற்றும் வேறு சில கோரிக்கைகள் அடங்கியதாக நூற்றுக்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்கள்  ஒன்றிணைந்து செயற்பட்டன. 
நியூ சவுத் வேல்ஸ் மாநில பாராளுமன்றத்தின் உடைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அத்துடன் அவுஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனித்தனியே  கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பல அவுஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து தமிழர்களுக்கு  ஆதரவான பதில்களே கிடைத்துள்ளது. 
இது தொடர்பாக மேலதிக தகவல்களை பின்னர் அறியத்தருகின்றோம்.