முழு நெருப்பு வளையம் போன்ற சூரிய கிரகணம் இன்று

ஞாயிறு ஜூன் 21, 2020

சூரிய கிரகணம் இன்று (21) காலை 10.16 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்குகிறது. இந்த கிரகணம் முழு நெருப்பு வளையம் போன்ற உச்சம் அடையக் கூடிய நேரம் காலை 11.49 மணி என தெரிவிக்கப்படுகின்றது.

கிரகணம் நிறைவடையக் கூடிய நேரம் மதியம் 1.30 மணி என கிரகணம் 3 மணி நேரம் 14 நிமிடம் 24 விநாடிகள் வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இதுவாகும். அடுத்து டிசம்பர் 14 ஆம் திகதி நிகழும்.