முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடம்!
சனி சனவரி 23, 2021

பீகாரின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவரின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லாலுவை நேரில் சந்திப்பதற்காக தனி விமானம் மூலம் பாட்னாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு விரைந்தனர்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனரான லாலு பிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்த போது கால்நடை தீவன ஊழல் செய்த வழக்கில் 14 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்.
2017ம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் யாதவுக்கு பல்வெறு உடல்நலக் குறைகள் இருப்பதன் காரணமாக சிறை நிர்வாகத்தின் அனுமதி பெற்று ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.