முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் குற்றச்சாட்டை நிராகரித்தார் சிறிசேன

ஞாயிறு செப்டம்பர் 20, 2020

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

.உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய பூஜிதஜயசுந்திர தாக்குதலுக்கான பொறுப்பையேற்று பதவிவிலகினால் அவரை வெளிநாட்டு தூதுவராக நியமிப்பதாகவும் ஓய்வுதீயத்தை பெற்றுதருவதாகவும் சிறிசேன தெரிவித்தார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டிருந்தார் .

ஆனால் முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கையொன்றில் இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ளதுடன் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை தீயநோக்கம் கொண்டவை என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர்காலத்தில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுமுன்னிலையில் ஆஜராவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் உண்மையை தெளிவுபடுத்துவார் என அவரது செயலாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.