மூன்றாம் கட்ட நியமனங்கள் நாளை வழங்கப்படும்!

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளை, மூன்றாம் கட்டமாக பட்டதாரிகள் பயிலுநராக இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, அலரிமாளிகையில் நாளை (18) நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

2012, 2013ஆம் ஆண்டுகளில், உயர்கல்விப் பட்டத்தைப்  பூர்த்திசெய்த வெளிவாரி பட்டதாரிகளுக்கே, இவ்வாறு பட்டதாரி பயிலுநர்களாக இணைப்பதற்கான உத்தியோகபூர்வமாக நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது.