மூன்று பிரிவினரை அடையாளம் கண்டுள்ளோம்

சனி ஜூலை 11, 2020

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுடன் தொடர்புபட்ட மூன்று பிரிவினரை அதிகாரிகள் இனம்கண்டுள்ளனர் என சிறிலங்கா  இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

 வீடுகளுக்கு சென்றுள்ள புனர்வாழ்வுநிலையத்தின் பணியாளர்கள்,போதனையாளர்கள்,மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களை பார்வையிட வந்தவர்கள் ஆகிய மூன்றுபிரிவினரையே கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருக்ககூடியவர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 புனர்வாழ்வு நிலையத்தின் பணியாளர்களை ஏற்கனவே தனிமைப்படுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் தற்காலிக போதனையாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களை 116 பேர் சென்றுபார்த்துள்ளனர்,441குடும்ப உறுப்பினர்களும் பார்வையிடவந்தவர்களும் இனம் காணப்பட்டுள்ளனர் இவர்களில் 328 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்எனவும் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.