முறைப்பாடு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

புதன் ஜூன் 12, 2019

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹா ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்ய, காவல் துறை  தலைமையகம் வழங்கியிருந்த கால அவகாசம் இன்றுடன் (12) நிறைவடையவுள்ளது.

இதற்கமைய, இன்று மாலை 4 மணிவரை, முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என, காவல் துறை  தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த மூவருக்கு எதிராக, நேற்றைய  தினம் வரை 11 முறைப்பாடுகள் கி​டைக்கப்பெற்றுள்ளதாக, காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ​ரிஷாட்டுக்கு எதிராக நேற்று (11) முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.