முதலையும் 12 குட்டிகளும் விடுவிக்கப்பட்டன

ஞாயிறு செப்டம்பர் 20, 2020

வவுனியா- குருந்துபிட்டிய பிரதேசத்திலுள்ள குளமொன்றில் பல மாதங்களாக சிறைப்பட்டிருந்த முதலையும் அதன் 12 குட்டிகளையும் பாதுகாப்பான பிரதேசமொன்றுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை குருந்துபிட்டிய பிரதேச இளைஞர்கள் முன்னெடுத்திருந்தனர்.

 இதற்கமைய பெகோ இயந்திரத்தின் உதவியுடன் இந்த முதலையையும் குட்டிகளையும் வெளியே எடுத்த இளைஞர்கள் அதனை, நீரேந்து பிரதேசமொன்றில் விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்த பிரதேசத்துக்கு உணவு தேடிச் சென்ற  இந்த முதலை கிணமொன்றுக்குள் வீழ்ந்து, வெளியேற முடியாமல் கிணற்றுக்குள் முட்டையிட்டு 12 குட்டிகளையும் ஈன்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.