முதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம் 16 ஆம் திகதி!

ஞாயிறு டிசம்பர் 08, 2019

இலங்கை  ரீதியில் உள்ள அரச உதவி பெறும், தனியார் பாடசாலைகளின் 2020 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் தேசிய வைபவமும், வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பான நிகழ்வு, 2020 ஜனவரி மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

 புதிய மாணவர்களை அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில், இரண்டாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு முதலாம் தர மாணவர்களை வரவேற்குமாறும், மாணவர்களது அனுமதி இடம்பெறும் ஜனவரி 16 ஆம் திகதிக்கு முன்னர் புதிய முதலாம் தர மாணவர்களை அறிமுகமாக்கும் நிகழ்வுகளை நடத்தி முடிக்குமாறும் கல்வியமைச்சு அதிபர்களைக் கேட்டுள்ளது.