முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

சனி சனவரி 25, 2020

இலங்கையில் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் நேற்று (24) யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது 42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகத்திற்கு பயன்படுத்தப்படும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பயன்பாட்டு அறிவியலுக்கான மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியன கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் ஆதரவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டுவந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளின் விளைவாக இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.