மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்

சனி செப்டம்பர் 12, 2020

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் நுரையீரல் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 

1986ம் ஆண்டு கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதை பெற்றவர். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு தொடர்கதை எழுதியவர். சுதாங்கனுக்கு ஆகாஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார். அவரது மனைவி சாந்தி 2006-ஆம் ஆண்டு காலமானார்.