மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மானின் 32வது ஆண்டு நினைவு 

வியாழன் பெப்ரவரி 14, 2019

விடுதலைப் புலிகளின் மத்திய குழு உறுப்பினரும் மூத்ததளபதியுமான லெப்.கேணல் பொன்னம்மான் 14.02.1987அன்று கைதடியில்  இடம்பெற்ற எதிர்பாராதவெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

ஆயிரக்கணக்கான வீரர்களை உருவாக்கிய பயிற்சிமுகாம்களுக்கு பொறுப்பாளராகவும்,இராணுவத் தொழில்நுட்பப் பிரிவில் பலசாதனைகளையும் படைத்தார்.

இவருடன் மேஜர் கேடில்ஸ் உட்பட 7 போராளிகள் வீரச்சாவடைந்தார்கள்

யோகரத்தினம் குகன் என்னும் இயற்பெயர் கொண்ட லெப்.கேணல்பொன்னம்மான் விடுதலைப் புலிகளின்  முக்கியதளபதிகளில் ஒருவராக அறியப்படுபவர்.கலட்டி யாழ்ப்பாணம் ஊரை சேர்ந்தவர்.

வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான்மிகவும்
வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும்பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்கு தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார்.

பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் குண்டுதயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது.

பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85,86ஆம்
ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார்.

இந்தியாவில்2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்ததுமாத்திரமன்றி  இராணுவத் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும்முக்கிய காரணியாக பொன்னம்மான்  செயற்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று 14/02/2019, அவர் உயிர் நீத்து 32, ஆண்டுகள் நினைவு நாளாகும்.