முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிப்பதை கைவிடவேண்டும் -கு.ராமகிருஷ்ணன்

புதன் அக்டோபர் 14, 2020

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கும்  முடிவை நடிகை விஜய்சேதுபதி  கைவிடவேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிக்கப்படுகின்றது.


 இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி , கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி ,இலங்கை கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக கோவையில் பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன்,இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கும்  முடிவை நடிகர் விஜய்சேதுபதி கைவிட வேண்டும் என தெரிவித்தார்.

ஈழதமிழர்களை கொடூரமாக  கொன்று , சிங்கள பேரினவாத  அதிபர் ராஜபக்சேவிற்கு அரசிற்கு துணை போனவர் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் எனவும், அப்படிப்பட்டவரின்  வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தில் தமிழத்தின் சிறந்த நடிகர்  விஜய் சேதுபதி நடிப்பது வேதனையளிக்கின்றது எனவும் தெரிவித்தார்.

சிங்கள அரசிற்கும், தமிழ் மக்களை கொன்றொழித்த  ராஜபக்சேவிற்கும்  ஆதரவாக செயலபட்டவர் முத்தையா முரளிதரன் எனவும், தனக்கு 

செல்வராக மககள் மனதில் நிலைக்க வேண்டுமானால் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில்  நடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அதையும் தாண்டி இது  கலை, சினிமா என்று சொல்லி முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடித்தால், நிச்சயமாக உலக தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

தந்தை பெரியார் கருத்துகளுக்கும் , பெரியாருக்கும்  பற்றுடையவராக நடிகர்  விஜய்சேதுபதி  இருந்தாலும் கூட , அவரது செயல் தமிழ் இனத்திற்கு மாறாக இருக்குமானால் அதை தந்தை பெரியார் திராவிட கழகம் கண்டிப்பாக எதிர்க்கும் எனவும், திரைப்படத்தை  திரையிட நாங்கள் அனுமதிக்க மதிக்க மாட்டோம் எனவும் தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.