மூதூர் படுகொலையின் 14 -ம் ஆண்டு நினைவேந்தல்!

ஞாயிறு ஓகஸ்ட் 02, 2020

சிறீலங்கா படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 தன்னார்வத் தொண்டுப் பணியாளர்களின் 14 வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் (04.08.2020) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல் 12.00 மணிவரை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு, கிளிச்சி பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிச்சிப் பகுதியில் குறித்த 17 பணியாளர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெறவுள்ளது.

இம்முறை கோவிட் 19 நுண்கிருமித் தொற்றுக் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானவர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் – ஏனையவர்கள் அஞ்சலி செலுத்தும்வகையில் பூங்கா மாலை 18 .00 மணிவரை திறந்திருக்கும் எனவும் – கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கம் அறிவித்துள்ளது.