மூவரைக் கொன்றது கொரோனா

புதன் சனவரி 13, 2021

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய ஆணும், கொழும்பு - 15 சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு - 10 சேர்ந்த 89 பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது.