M.I.17 ரக உலங்குவானூர்தி ரஷ்யாவிலிருந்து கொள்வனவு!

செவ்வாய் பெப்ரவரி 12, 2019

M.I .17 ரக ஹெலிகொப்டரை ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்வது தொடர்பில், சிறீலங்காவில் கலந்துரையாடலை முன்​னெடுத்து வருவதாக, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

அமைதிக் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக, சிறீலங்கா குறித்த ஹெலிகொப்டரை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.1990ஆம் ஆண்டுக்கு முன்னதாக சிறீலங்கா M.I .17 ரக ஹெலிகொப்டரை கொள்வனவு செய்திருந்ததுடன், சுமார் 100 நாடுகள் வரை குறித்த ஹெலிகொப்டரை பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருள்கள் கொண்டு செல்ல, பயணிகள் போக்குவரத்து, சோதனை நடவடிக்கைகள், மீட்பு நடவடிக்கைகள், தீயணைப்பு விடயங்கள் என்பவற்றிட்காக பயன்படுத்தும் நோக்கிலேயே இந்த ​ ஹெலிகொப்டர் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.