Mi6: சிறப்பம்சங்கள்

April 02, 2017

சியோமி நிறுவனத்தின் Mi6 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு தயாராகி விட்டதை சீனாவின் 3C சான்றிதழ் உறுதி செய்துள்ளது. அதன்படி Mi6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.

சியோமி நிறுவனம் சில காலமாக தயாரிப்பில் வைத்துள்ள Mi6 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு தயாராகி விட்டது. இதுவரை வெளியீடு குறித்து சியோமி சார்பில் எவ்வித அறிவிப்பும் வழங்கப்படாத நிலையில் Mi6 ஸ்மார்ட்போன் 3C சான்றிதழ் பெற்றிருப்பதாக சீன இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே Mi6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இதை தொடர்ந்து தற்சமயம் 3C சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டதால் இதன் வெளியீடு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 3C என்பது ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய சீன நாட்டு அனுமதி வழங்கும் முறை ஆகும். சீனாவில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய 3C சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அந்தவகையில் Mi6 ஸ்மார்ட்போனும் 3C சான்றிதழ் பெற்றிருப்பதை தொடர்ந்து மிகவிரைவில் இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வரை வெளியாகி இருக்கும் தகவல்களில் Mi6 ஸ்மார்ட்போன் இரு மாடல்களில் வெளியிடப்படும் என்றும் இவற்றின் திரை அளவு 5.15 இன்ச் மற்றும் 5.7 இன்ச் கொண்டிருக்கும். இதில் சிறிய திரை கொண்டுள்ள மாடல் Mi6 என்றும் பெரிய திரை கொண்டுள்ள மாடல் Mi6 பிளஸ் என்றும் அழைக்கப்படலாம். 

Mi6 சிறப்பம்சங்களை பொருத்த வரை ஃபுல் எச்டி 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 4ஜிபி / 6ஜிபி ரேம், 32ஜிபி / 64ஜிபி / 128ஜிபி இன்டெர்னல் மெமரியும், 19 எம்பி சோனி IMX400 சென்சார் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராவுடன் அல்ட்ரா பிக்சல் சென்சார் வழங்கப்படலாம். இத்துடன் 3200 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் கூறப்படுகிறது. 

Mi6 பிளஸ் மாடலில் QHD 2560x1440 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 4ஜிபி / 6ஜிபி / 8ஜிபி ரேம், 64ஜிபி / 128ஜிபி / 256ஜிபி இன்டெர்னல் மெமரியும், 12 எம்பி டூயல் கேமரா சோனி IMX362 சென்சார், 8 எம்பி அல்ட்ரா பிக்சல் செல்ஃபி கேமரா, 4500 எம்ஏஎச் திறன் தொண்ட பேட்டரி வழங்கப்படலாம்.

சியோமி Mi6 மற்றும் Mi6 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் குவால்காம் நிறுவனத்தின் 835 ஆக்டா-கோர் சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொருத்த வரை Mi6 ஸ்மார்ட்போன் - 4ஜிபி ரேம் + 32ஜிபி இன்டெர்னல் மெமரி, 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டெர்னல் மெமரி என மூன்று வித சிறப்பம்சங்களை கொண்டிருக்கலாம். இவை முறையே ¥1,999 அதாவது இந்திய மதிப்பில் ரூ.18,798, ¥2,299 அதாவது இந்திய மதிப்பில் ரூ.21,610 மற்றும் ¥2,699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.25,382 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   

சியோமி Mi6 பிளஸ் ஸ்மார்ட்போனும் - 6ஜிபி ரேம் + 64ஜிபி இன்டெர்னல் மெமரி, 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டெர்னல் மெமரி என மூன்று வித சிறப்பம்சங்களை கொண்டிருக்கலாம். இவை முறையே ¥2,599 அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,441, ¥2,999 அதாவது இந்திய மதிப்பில் ரூ.28,203 மற்றும் ¥3,499 அதாவது இந்திய மதிப்பில் ரூ.32,905 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகள்
திங்கள் August 21, 2017

உடல் நலமே உயிருக்கு உறுதியாகும். மகிழ்வுடன் நீண்ட நாள் வாழவும், சிந்திக்கவும், 

செவ்வாய் யூலை 18, 2017

சீனா விண்வெளி, ரெயில்வே மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. தற்போது பலம் பொருந்திய ‘கொழு கொழு’ நாய்களை உருவாக்கியுள்ளது.

வெள்ளி யூலை 07, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனிக்கு இன்று 36-வது பிறந்தநாள் ஆகும்.