நாகை திருவள்ளுவன் கைதை கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் டிசம்பர் 10, 2019

மேட்டுப்பாளையத்தில் சாதி அதிகாரத் திமிருக்கு 17 தலித்துகள் பலிக்கு நீதி கேட்ட தோழர் நாகை நாகை திருவள்ளுவனைக் கைது செய்ததைக் கண்டித்து பெரியாரின் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று 09/12/2019 மாலை 3 மணிக்குச் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

t

தீண்டாமை சுவரால் படுகொலை செய்யப்பட்ட தலித் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், சுவர் கட்டிய சிவசுப்ரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும், தோழர் நாகை திருவள்ளுவனைத் தாக்கிய காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும், தோழர் நாகை திருவள்ளுவன் மீது போடப்பட்ட அணைத்துப் பொய் வழக்குகளும் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

t

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

t

இதில், மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, மே17 இயக்கம் திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் பங்குபெற்றனர்.
 

t

k