நாம் நிச்சயம் வெல்வோம் என்கிற நம்பிக்கை பிறக்கிறது!

வெள்ளி மே 22, 2020

உயிருக்கும் மேலான தமிழக குருதி உறவுகளே...
உங்கள் இடைவிடாத ஒவ்வொரு உணர்வு சார்ந்த முயற்சிகளும், மீண்டும் மீண்டும் தமிழர் நிலத்தில், இழந்த உணர்வுகளை உயிர் பெற வைக்கிறது....

வீட்டுக்கு வெளியே விளக்கேற்றி நிற்கும் தமிழ் மக்களோடு மாவீரர் நாள் பாடலை இணைத்துப் பார்க்கும் போது, எமது குருதி நாளங்கள் பல ஆயிரம் மடங்கு வலுப்பெறுகிறது.....

நாம் நிச்சயம் வெல்வோம் என்கிற நம்பிக்கை பிறக்கிறது...

உறுதியாக மாவீரர்களின் கனவுகள் நினைவாகும்...

நாம் தமிழராக ஒருங்கிணைவோம்.
தமிழர் தேசம் படைப்போம்.

தமிழர்களின் தாகம்
தமிழீழ தாயகம்.

-சோழன் மு.களஞ்சியம்,
தமிழர் நலப் பேரியக்கம்.