நான் பிஜேபி ஆளு! அப்புறம் மதக்கலவரம் தான்? பிஜேபி நிர்வாகி மிரட்டல்-

புதன் சனவரி 13, 2021

பாஜக அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மதத்தை அடிப்படையாக கொண்டு கலவரங்கள் உண்டாக்கி வருகிறது.

அதேப்போன்ற உத்தியை தமிழகத்திலும் செயல்படுத்திட வேண்டும் என்பதற்காக மாநிலத்தில் உள்ள ஏராளமான ரவுடிகளை தங்கள் கட்சிக்குள் இணைத்துக்கொண்டு அவ்வப்போது அராஜகங்களை மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள துரித உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்த பாஜக நிர்வாகி ஒருவர், அமித்ஷாவின் உதவியாளருக்கு "ஃபோன் செய்து" மதக்கலவரம் செய்ய வைப்பேன் என உணவக உரிமையாளரை பகிரங்கமாக மிரட்டியுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து பிஜேபி திருவல்லிக்கேணி மேற்கு தொகுதி செயலாளர் பாஸ்கர் மற்றும் பிஜேபி திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் புருஷோத்தமன் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். 

இதுமட்டுமல்லாமல் "சிக்கன் ரைஸுக்காக" 1000 பேர் தயாராக இருக்கிறார்கள், மதக்கலவரம் வெடிக்கும் என பாஜக நிர்வாகியே மிரட்டல் விடுப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற மதவாத சக்திகளால் வரவிருக்கும் ஆபத்து இதன் மூலம் அம்பலமாகிவிட்டது என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.