நாங்கள் அழிந்து போகப் போவதில்லை – தி.இறைவன்

ஞாயிறு மே 03, 2020

தமிழினத்தை அழிப்பதன் மூலம் ஒட்டுமொத்த விடுதலைப் போராட்டத்தைப் பலப்படுத்தும் செயற்பாடுகளைத் தான் சிங்களம் செய்துள்ளது என்று போராளி ஊடகவியலாளர் இறைவன் (தி.தவபாலன்) தெரிவித்த செவ்வியை வெளியிடுகின்றோம்.

 

முள்ளிவாய்க்காலில் இயங்கிய ஊடக இல்லத்திற்கு 08.04.2009 அன்று வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு புலிகளின் குரல் வானொலியின் பிரதம ஆசிரியர் தெரிவித்திருந்தார்.

 

நான்காம் கட்ட ஈழப் போரின் தலைவிதியைத் தீர்மானித்த ஆனந்தபுரம் சமர் நடந்து முடிந்த ஓரிரு நாட்களில் இலட்சிய உறுதி தளராது போராளி ஊடகவியலாளர் இறைவன் தெரிவித்திருந்த கருத்துக்களை 11 ஆண்டுகள் கழித்து ஊடக மையம் (பிரான்ஸ்) மீண்டும் வெளியிடுகின்றது.

 

முள்ளிவாய்க்காலில் இறுதி வரை எதிரியிடம் மண்டியிடாது நின்றவர் இறைவன் அவர்கள். அவருக்கு என்ன நடந்தது என்று இன்று வரை எவருக்குமே தெரியாது.

 

அவரது இலட்சிய உறுதிக்கு நாம் தலைவணங்குகின்றோம்.

 

 

போராளி ஊடகவியலாளர் இறைவனின் செவ்வி