நானு-ஓயா விபத்தில் இளைஞன் பலி

செவ்வாய் செப்டம்பர் 15, 2020

நானு-ஓயா காவல் துறை பிரிவுக்குட்பட்ட பங்களாவத்தை வெண்டிக்கோனர் முதலாம் முடக்கு பகுதியில், இன்று (15) இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

நோர்வூட் தோட்டம் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த செல்வராஜ் பிரேம்சதீஸ் என்று 24 வயதுடைய இளைஞனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நோர்வூட் பகுதியில் இருந்து நுவரெலியாவை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமானபேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சம்பவ இடத்தில் பலியான இளைஞனின் சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றும்  மோட்டார் சைக்கிள் மோதி பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.