நாரங்கல சென்றால் சட்ட நடவடிக்கை

வியாழன் மார்ச் 04, 2021

பதுளை நாரங்கல மலைப் பிரதேசத்துக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அந்த மலைப் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் சிலவற்றை கருத்திற்கொண்டு நாரங்கல மலைப் பிரதேசத்துக்கு உட்பிரவேசிக்க தடை விதிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

உத்தரவை மீறி நாரங்கல மலைப் பிரதேசத்திற்கு உட்பிரவேசிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம மேலும் தெரிவித்துள்ளார்.