நாடாளுமன்ற அமர்வுகளில் மட்டுப்பாடு

வியாழன் அக்டோபர் 29, 2020

கொரோனா தொற்று காரணமாக, அடுத்த மாதம் நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,நவம்பர் மாதம் 4,5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாதென, நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த மாதம் 3ஆம் திகதி மாத்திரம் காலை 10 மணியிலிருந்து 1 மணிவரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.