நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் நெருங்கிய செயற்பாட்டாளரின் வீடு மீது தாக்குதல்

வெள்ளி ஜூலை 10, 2020

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் பணியாற்றும் நெருக்கமான செயற்பாட்டாளர் ஒருவரின் சங்கானையில் உள்ள வீடு இன்றிரவு (11) தாக்கப்பட்டுள்ளது. 

எட்டிற்கு மேற்பட்ட வாள்வெட்டுக் குழு உறுப்பினர்கள் வீட்டுக்குச் சென்று பெரும் சத்தம் எழுப்பினர். வீட்டில் உள்ளவர்கள் கேற் கதவைத் திறக்காமல் உள்ளே இருந்தனர். 

இதனால், குறித்த வாள்வெட்டு குழுவினர் அந்த வீட்டின் கேற் மற்றும் வேலித்தகரம் போன்றவற்றை வாள்களால் வெட்டிச் சேதமாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். 

சம்பவத்தை கேள்வியுற்று அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நிலமையை அவதானித்தார். இந்த விடயம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.