நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் கணக்காய்வு செய்யப்படவேண்டும்

சனி ஏப்ரல் 30, 2022

இலங்கையர்களில் 88% மக்கள் தாங்கள் அல்லது அவர்களது நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஒரு மாதத்தில் எரிவாயு, எரிபொருள், பால் மா, உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற வரிசையில் நிற்க வேண்டியிருந்தது என்று தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் பொருளாதார நெருக்கடியின் விளைவாக தனது வருமானம் அல்லது அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவரின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக பத்தில் ஒன்பது இலங்கையர்கள் கூறியுள்ளனர்.

மாற்றுக்கொள்கைககளுக்கான நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விடயங்கள் வெளியாகியுள்ளன தற்போதைய நிதி நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தை மக்கள் ஏகமனதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மொத்தத்தில் 62% இலங்கையர்கள் தற்போதைய அரசாங்கத்தின் தவறானபொருளாதார நிர்வாகத்தை குற்றம் சுமத்துகின்றனர்

அதே நேரத்தில் முறையே 14.5% மற்றும் 14.4%, சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த அரசாங்கங்களின் தவறான பொருளாதார நிர்வாகத்தையும் நாட்டின் ஊழல் அரசியல் கலாசாரத்தையும் குற்றம் சுமத்துகின்றனர்.

இதற்கிடையில் 96% க்கும் அதிகமான இலங்கையர்கள் அனைத்து அரசியல்வாதிகளின் சொத்துக்களும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்களின் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

ஆய்வின்படி பத்தில் ஒன்பது இலங்கையர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்றும் ராஜபக்ச குடும்பம் இலங்கை அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கருத்துக் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை 87% பேர் ஆதரிப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.