நாடாளுமன்றத்திற்காக தனியான ஒரு தொலைக்காட்சி!

புதன் ஓகஸ்ட் 21, 2019

நாடாளுமன்றத்திற்காக தனியான ஒரு தொலைக்காட்சி அலைவரிசையை பெற்று ஔிபரப்ப நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

எமது ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மக்களின் தேவையை கருதி தகவல்களை தெரிந்துகொள்ள தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.