நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 5 பேர் கைது!!

புதன் செப்டம்பர் 15, 2021

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருட்களுடன் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடுவெல காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொத்தலாவல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொரளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் பார்க் வீதி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 கிராம் 250 மில்லிகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கஹவத்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 18.75 மில்லிலீற்றர் மதுபானம்,135 லீற்றர் கோடா, செப்புக்கம்பிகள் உள்ளிட்டவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி கட்டுகஸ்தோட்டைப் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹல்ஒழுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 590 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பல்லேகம ஹல்ஒழுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை,குருநாகல் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 30.750 மில்லிலீற்றர் மதுபானம்,2 செப்புக்கம்பிகள்,எரிவாயு அடுப்பு 01,எரிவாயு சிலிண்டர் 01,இரும்பு பீப்பாய் 01 என்பவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.