நாட்டுக்கு உணவு வழங்கும் விவசாயிகள் வீதியில்!!

புதன் அக்டோபர் 20, 2021

விவசாயிகள் எதிர்நோக்கும் உரப் பற்றாக்குறையை முன்னிறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. 

குருநாகல் தேர்தல் தொகுதியின் வெல்லவ பிரதேசத்தில் விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

‘நாட்டுக்கு அரிசி வழங்கும் விவசாயிகள் வீதியில்’ எனும் கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவின் உருவப் பொம்மையும் எரிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேயசிங்க மற்றும் ஜே.சி.அலவதுவல ஆகியோரும் கலந்துகொண்டனர்.