நாடுமுழுவதும் தினமும் ஐந்து மணித்தியாலங்கள் சுழற்சிமுறையில் மின்வெட்டு.

வெள்ளி மார்ச் 22, 2019

மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் போதிய மழைவீழ்ச்சியின்றி, நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பகல் வேளையில் மூன்று மணித்தியாலங்களும், இரவில் ஒரு மணித்தியாலமும் சுழற்சி முறையில் நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

லக்ஸபான, மேல்கொத்மலை நீர் உற்பத்தி நிலையங்கள் உள்ள பகுதிகளில் போதிய மழைவீழ்ச்சி இன்மையால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

தேவேளை, அதிகரித்த வெப்பம் காரணமாக, மின்தேவை சடுதியாக அதிகரித்துள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.