நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்

செவ்வாய் ஜூலை 14, 2020

 நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

தென் ஆப்ரிக்காவில், இன வெறியை எதிர்த்து போராடியவர், முன்னாள் அதிபர், நெல்சன் மண்டேலா; இவர், 95வது வயதில், 2013ல், காலமானார்; இவரது மனைவி, வின்னி மடிகிசேலாவும், இன வெறியை எதிர்த்து போராடி உள்ளார். இவர், கடந்த 2018ல் காலமானார்.

மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா(59) நேற்று(13) காலை ஜோகன்ன்ஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஜிண்ட்ஸி டென்மார்க்கின் தூதராக இருந்தது குறிப்பிடத்தக்கது.