நெஞ்சங்களில் நினைவேந்தி நினைவு கூருவோம்

திங்கள் மே 18, 2020

அன்பான அவுஸ்திரேலியா வாழ் தமிழ் உறவுகளே!

நீதிக்கான குரலாக அனைவரும் ஒன்றுபட்டு எமது உறவுகளை நெஞ்சங்களில் நினைவேந்தி நினைவு கூருவோம்.  தற்போதைய கொறானா வைரஸ் என்ற தொற்றுநோயினால் ஏற்பட்ட இடர்கால நிலையால், அனைவரும் ஒன்றுபட்டு நினைவுகூர முடியாத காலச்சூழல் உள்ள நிலையில், அனைவரும் தனித்திருந்து ஒவ்வொரு வீட்டிலும் எம் உறவுகளை நினைவில் இருத்தி சுடரேற்றி நினைவுகூருவோம்.

இணைய வழியாக ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

காலம்: 18 - 05 - 2020 Monday 7pm - 8pm (AEST), 6.30pm - 7.30pm (SA), 5pm - 6pm (WA).

இயலுமானவர்கள் Zoom செயலி ஊடாக இந்த நிகழ்வில் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் கணினியில் இந்தச் செயலியைத் தரவிறக்க (Download): https://zoom.us/download இந்த இணைப்பில் செயலியைத் தரவிறக்கம் செய்யுங்கள். பின்னர் கீழ்வரும் இணைப்பை அழுத்தினால் மே-18 நிகழ்விலே நீங்கள் இணைக்கப்படுவீர்கள். இந்த இணைப்பு மே 18 அன்று மெல்பேர்ண் நேரம் மாலை 6.30 மணி தொடக்கம் 8 மணிவரை செயற்படும்.

தொலைபேசியிலும் Zoom Appஐத் தரவிறக்கி அதன்மூலமும் கலந்துகொள்ளலாம். Apple store அல்லது Play store இல் zoom என்ற Appஐத் தேடித் தரவிறக்கவும்.

நிகழ்வில் கலந்துகொள்ள அழுத்த வேண்டிய இணைப்புக்கள்:
Zoom Link: http://tiny.cc/may18au2020
or
https://us02web.zoom.us/j/89623509709
அல்லது, Zoom செயலியில் Meeting ID கேட்குமிடத்தில் 89623509709 என்ற இலக்கத்தை அளித்து இணைந்து கொள்ளலாம்.

இவை மூலம் கலந்துகொள்ள முடியாதவர்கள் முகநுால் வழியாக கீழ்வரும் இணைப்பில் நிகழ்வைப் பார்க்கலாம்.
Facebook Live: http://facebook.com/tccaustralia  
Youtube Link: https://www.youtube.com/watch?v=RHIRwKAt-mI
தொடர்பு: 0401 842 780 (TCC NSW), 0433 002 619 (TCC VIC) 0421 514 004 (ATC WA) 0469 016 416 (ATC QLD)

எங்கள் வீடுகளில் நினைவுச்சுடர் ஏற்றுவோம். ஒன்றுகூட முடியாவிட்டாலும் ஒன்றாகி நிற்போம்.
ஒரு மணிநேரம் அவர்களுக்காய் ஒன்றாகி அவர்தம் நினைவேந்தி நிற்போம்.

18-05-2020 Monday 7pm (NSW, VIC, ACT, TAS, QLD) 6.30pm (SA) 5pm (WA)

உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி
இவ்வண்ணம்,
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு - அவுஸ்திரேலியா