நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் பலி!

ஞாயிறு ஜூலை 14, 2019

நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது.வீடுகள் மற்றும் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலையும் எழுந்துள்ளது.வெள்ளம் ஒருபுறம் இருக்க,ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களை மீட்டு பாதுகாப்பு நிறைந்த இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

நேபாளத்தில் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர்.24 பேரை காணவில்லை.20 பேர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு போலீசார் தெரிவித்து உள்ளனர்.