நெற்கதிர் அறுவடை விழா

புதன் சனவரி 27, 2021

நல்லூர்க் கந்தன் சுவாமி கோவிலில், இன்று (27) நெற்கதிர் அறுவடை விழா நடைபெற்றது.

தைப்பூசத் தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில், வழமைபோல், கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் இணைந்து, முதலாவது கதிரை அறுவடை செய்வதற்கு கோவிலுக்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலுக்குச் சென்று, அறுவடை செய்தனர்.

அந்த நெல்லில் இருந்து அமுது தயாரித்து, கந்தனுக்குப் படையல் செய்து, பூசைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கும் அமுது வழங்கப்பட்டது.