நெய்வேலி நிலக்கரி விபத்தில் இறந்தவர்களுக்கு கண்ணீர்அஞ்சலி: வ.கௌதமன்

புதன் ஜூலை 01, 2020

வ. கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி

நெய்வேலி நிலக்கரி விபத்தில் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

இறந்தவர்களுக்கு இழப்பீடு 3 லட்சம் என தமிழக முதல்வர் அறிவித்திருப்பது அந்த உயிர்களை கொச்சை படுத்துவதற்கு சமமானது.

மண்ணையும் கொடுத்து மக்களின் உயிரையும் குடிக்கும் என்.எல்.சி எமன் இனி வேண்டவே வேண்டாம்.

இதே ஆண்டு மே மாதம் 7 உயிர்கள் கருகின. இப்போது 8 உயிர்கள் கருகி 2 உயிர்கள் காணாமல் போய் 11 உயிர்கள் படுகாயமடைந்து 11 உயிர்கள் காயங்களோடு ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய மாநில அரசுகள் இறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கோடி நிவாரணம் தரவேண்டும்.

உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்.

இழந்தவரை போதும் இனி எங்கள் ஒருபடி மண்ணையும் என். எல். சி எமனுக்காக விட்டுத்தர மாட்டொம்.