நிசங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையுத்தரவு

வெள்ளி ஜூலை 31, 2020

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ ​ஆகியோருக்கு எதிரான வழக்குக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணைகளை இடைநிறுத்தவே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று  பிறப்பித்துள்ளது.