நீராவியடி விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

திங்கள் அக்டோபர் 14, 2019

நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் தேரர் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை மீறியமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீ ஸ்கந்தராஜா, இந்த மனுவினை இன்று (14) தாக்கல் செய்துள்ளார்.