நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் பலி

ஞாயிறு ஜூலை 12, 2020

நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரிழ் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று (12) இடம்பெற்றுள்ளது. 

வாழைச்சேனை காவல் துறை  பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை வயல் வீதியைச் சேர்ந்த சிவரூபன், நந்தினி ஆகியோர்களின் மகனான யக்ஸன் (வயது 14) என்பவரே அரக்கல் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

 இவர், பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போதே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக காவல் துறை   விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.